CNC -Computer numerical control (CNC) is a manufacturing method that automates the control, movement and precision of machine tools through the use of pre-programmed computer software,
CNC னா என்ன அப்படின்னு internet ல நம்ம தேடுனா கோடி கணக்குல ரிசல்ட் இது வரும். அதுல இருக்கிறது அப்படியே காப்பி பண்ணி பேஸ்ட் பண்றது மாதிரி இல்லாம உங்களுக்கு புரியிற மாதிரி நான் சொல்ல try பண்றேன்.
நீங்க cnc turning machine பற்றி தெரிஞ்சிக்க முன்னாடி கண்டிப்பா manual lathe பற்றி தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப அவசியம்.
ஏன் தெரிஞ்சுக்கணும் அப்படின்னா? நம்ம cnc machine னோட மூதாதையர் அப்படின்னு சொல்றது தான் manual lathe machine . latheதோட பரிணாம வளர்ச்சிதான் இப்போ cnc வளர்ந்து இருக்கு இது இதோட நிக்காது அடுத்த அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா நகரும்.,.
நண்பன் அப்படிங்கற ஒரு தமிழ் படத்துல விஜய் ஒரு டயலாக் பேசிருப்பாரு எந்த ஒரு உபகரணம் மனுசனோட வேலைப்பளுவ எளிதாக்குதோ அதுதான் மிஷின் அப்படின்னு ஒரு டயலாக் பேசிருப்பாரு அதுதான் உண்மை..
முன்னாடி எல்லாம் நம்ம ஊர்ல விவசாயம் பண்றவங்க மக்களே அவங்களே கையால எல்லா வேலையும் பண்ணிக்கிட்டு இருந்தாங்க அதுக்கப்புறம் உழவு போன்ற தொழில்கள் எல்லாம் மாடுகளை வைத்து கலப்பையை வைத்து பண்ணிக்கிட்டு இருந்தாங்க இப்போ டிராக்டர் வைத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க இதே மாதிரி தான்
பழங்காலத்தில ஒரு சக்கரத்தை உருவாக்கணும் நீங்க சொல்லியிருந்தீங்கன்னா ஆப்பு இல்லையென்றால் வெட்டும் கருவி மாதிரி ஏதாவது ஒரு பொருளை வைத்து கையாலேயே உட்கார்ந்து அதோட வடிவத்துக்கு கொண்டு வருவாங்க….இது மனுசனோட நூறு சதவிகிதம் உழைப்ப அதுல போட்டே ஆகணும் மனுஷன் வேலை செஞ்சா மட்டும்தான் அந்த உருவத்தில் ஒரு மாற்றம் வரும் அப்படி இல்லைன்னா அது அப்படியே தான் இருக்கும்.அது மட்டும் இல்லாம ஒரு வட்ட வடிவத்தில் நீங்க வேணும்னு கேட்டீங்கன்னா சாதாரண ஒரு மனுஷனால 100% அதோட வடிவத்தை அதனால கொண்டு வர முடியாது
இந்த மாதிரி நேரத்துல தான் மெஷின் கண்டுபிடிக்க வேண்டிய காலகட்டத்திற்கு மனிதர்கள் நகர்ந்தார்கள்.அந்த மிஷின் அவனோட வேலைப்பளுவையும் குறைச்சது அவங்க எதிர்பார்த்த அந்த வடிவத்தையும் எந்த அளவுக்கு துல்லியமாக கொண்டு வர முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு வந்துச்சு..
இப்ப மேல படத்துல காட்டியிருக்கிற இந்த lathe machine மனுஷனோட 50% வேலைப்பளுவையும் அவன் எதிர்பார்த்த துள்ளியத்தை 50% கொண்டு வர முடிந்தது அப்படினா அதோட அடுத்த கட்ட வளர்ச்சி தான் CNC .இது மனுசனோட 80 சதவீதம் வேலைப்பளுவையும் 80 சதவீத எதிர்பார்த்த அளவுகளையும் வடிவத்தையும் கொண்டுவருவதற்கு ரொம்ப உபயோகமா இருந்துச்சு இது மேலும் மேலும் நூறு சதவீதத்தையும் அதிகரிப்பதற்கான கண்டுபிடிப்புகள் போய்கிட்டு தான் இருக்கு…
இப்ப cnc machine னோட தேவை என்ன அப்படிங்கறது உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும்னு நம்புறேன் இதுக்கு அப்புறம் CNCபத்தி உங்களுக்கு நான் தெளிவா Explain பண்றேன்
இப்ப இது மாதிரி மேனுவல் மிஷின்ல ஏதாவது ஒரு வடிவத்துக்கு நாம கொண்டு வரணும்னா நம்ம கைகளால் வேலை செய்வோம் இதோட அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி என்ன அப்படின்னா அந்த மிஷினுக்கு நம்ம ஒரு கமெண்ட் கொடுத்துட்டோம் அப்படின்னா அந்த கமெண்ட் அது எடுத்துக்கிட்டு நம்ம என்ன கமெண்ட் கொடுத்திருக்கிறோமோ அதற்கு ஏத்த மாதிரி அந்த மிஷின் நமக்கு அந்த பாகங்களை உற்பத்தி செஞ்சு தரும்
இப்போ என்கிட்ட தமிழ்ல பேசினா எனக்கு நல்லா புரியும் நான் என்ன வேலை செய்யணும் அப்படிங்கறத நீங்க தமிழ்ல என்கிட்ட சொன்னீங்கன்னா அது நான் புரிஞ்சுகிட்டு அந்த வேலையெல்லாம் செஞ்சு முடிப்பேன் இதே மாதிரி மிஷினுக்கு அதோட லாங்குவேஜ் அப்படின்னு ஒன்னு இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி அந்த லாங்குவேஜ்ல நம்ம கமெண்ட் கொடுக்கும்போது அது அதை எடுத்துக்கிட்டு அதுக்குரிய வேலைய அது செஞ்சு முடிக்கும் .
இப்ப மிஷின் ஓட லாங்குவேஜ் அப்படின்னு ஒன்னு இருக்கு அப்படிங்கிறது உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும் இப்ப அந்த லாங்குவேஜ் எந்த ஒரு வடிவத்தில் இருக்கும் அப்படிங்கிறது இப்போ பார்ப்போம்
numerical
letters ( G, K,L, A, R, U,V, I)
symbols ( – , / . =)
numbers ( 1 2 6 8 6 9 3 )
இது மாதிரி letters, symbols, numbers வச்சு இதன் மூலமா ஒரு ப்ரோக்ராம்யை அந்த machine கிட்ட input கொடுக்கும் போது அதை அது input dataவாக எடுத்துக்கிட்டு நம்ம என்ன கமெண்ட் கொடுத்தோமோ அதுக்கேத்த வேலையா அது செஞ்சு முடிக்கும்.
உதாரணமாக G01 X10.0 F0.5
G01- Linear interpolation :(LINE அப்படிங்கறது ஒரு கோடு. இந்த line னானது கிடைமட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ அல்லது பக்கவாட்டிலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இது ஒரு கோடு .இது கண்டிப்பாக வளைவாக இருக்காது)
X10.0 -X-axis 10mm 🙁 axis அப்படிங்கறது ஒரு திசையை குறிக்கும். கிழக்கு மேற்கு வடக்கு தெற்குனு நாம் சொல்வது போல இது மாதிரி மிஷினுக்கான திசையை குறிக்கும் இது X-axis , y-axis , z-axis போன்ற பல ஆக்சிஸ் களை கொண்ட மிஷின்கள் இருக்கின்றன.
F0.5 – 0.5 (F- feed tool நகரும் வேகத்தை குறிக்கும்)
இப்போது இந்த machine tool நாம் X -axis ல் 10 mm அளவிற்கான இடத்திற்கு F 0.5 அளவு வேகத்தில் நேரான பாதையில் வரச் சொல்லி நாம் கமெண்ட் அளித்திருக்கிறோம்.
இப்போது உங்களுக்கு Machine லாங்குவேஜ் அப்படி என்றால் என்ன அப்படின்னு உங்களுக்கு நல்லா புரிஞ்சி இருக்கும்னு நான் நம்புறேன்..
Coding
G- code( G- code என்பது பொதுவாக நாம் எந்த ஒரு வடிவத்திற்காக அந்த பொருளை மாற்ற விரும்புகிறோமோ அந்த வடிவத்திற்கான ஒரு கமெண்
உதாரணமாக இந்த ஒரு இடத்திலிருந்து இந்த ஒரு இடம் வரை வளைவாக இருக்க வேண்டும் என்று நாம் விருப்பப்பட்டால் அந்த வளைவுக்கான கமெண்டை நாம் கொடுக்க வேண்டும் நேராக போக வேண்டும் என்று நாம் விருப்பப்பட்டால் நேராக செல்வதற்கான ஒரு கமெண்ட் கொடுக்க வேண்டும் இப்போது drill மாதிரி ஒரு துளையிட வேண்டுமென்றால் அதற்கான ஒரு கமெண்ட் கொடுக்க வேண்டும்.
G00 Rapid Motion Positioning
G01 Linear Interpolation Motion
G02 Circular Interpolation Motion-Clockwise
G03 Circular Interpolation Motion-Counter Clockwise
G04 Dwell
G28 – first reference point
G30 – Second reference point
M-Code :
M-code அப்படிங்கிறது அந்த machine ன் செயல்பாடுகளை கண்ட்ரோல் பண்ணுவதற்கான கமெண்ட்களை கொடுக்கும் ஒரு section
உதாரணமாக இந்த machine spindle ஆனது கடிகார திசையில் சுற்ற வேண்டும் . அல்லது கடிகாரத்தின் எதிர் திசையில் சுற்ற வேண்டும் அல்லது இப்போதுcoolant on பண்ண வேண்டும் அல்லது coolant off செய்யப்பட வேண்டும் அல்லதுtool change பண்ண வேண்டும் இது மாதிரியான மெஷினோட செயல்பாடுகளை குறிக்கும் கமெண்ட்களை நாம் M-code என்று சொல்லுவோம்
M01 Operational stop
M02 End of Program
M03 Start Spindle – Clockwise
M04 Start Spindle – Counter Clockwise
M05 Stop Spindle
M06 Tool Change
M07 Coolant on mist coolant
M08 Flood coolant on
M09 Coolant off
M10 Chuck open
M11 Chuck close
இப்போது CNC machine ல் programme அப்படின்னா என்ன அப்படின்னு உங்களுக்கு ஓரளவுக்குபுரிஞ்சிருக்கும் அதோட வேலை செய்யும் விதம் எப்படி இருக்கும் அப்படின்னு புரிஞ்சிருக்கும்
CNC ல எந்தெந்த மிஷன் எல்லாம் இருக்கு அப்படின்னு பார்ப்போம்
Types of cnc
lathe
milling
turn mill
grinding
laser cutting
waterjet cutting
router
wire edm
இது மாதிரியான பல machine இருக்கு அதை சொல்லிக்கிட்டே போனா இந்தக் கட்டுரை முடியவே முடியாது அந்த அளவுக்கான மிஷின்கள் இப்போ வந்துடுச்சு
இவ்வளவு நேரம்உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த கட்டுரையை பொறுமையாக படித்ததற்கு நன்றி உங்கள் வருகையை மீண்டும் எதிர்பார்க்கிறோம் ..
இப்படிக்கு TSRCNC